மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் முன்னிலையில் சூர்யா நிதியுதவி வழங்கியது ஏன்? கிடைத்த புது தகவல்.!

பார்வதியம்மாளுக்கு வழங்கிய 15 லட்சத்தை முதலில் முதலமைச்சர் முன்னிலையில் கொடுக்க சூர்யா திட்டமிட்டாராம், ஆனால், தற்போது அவரால் வர முடியாது என்பதால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முன்னிலையில் இந்த நிதியுதவி விழா நடைபெற்றதாம்.

ஜெய் பீம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் தயாரிப்பாளரும் நடிகருமான சூர்யா, ஜெய் பீம் படத்தின் உண்மையான நாயகியான பார்வதி அம்மாளுக்கு ( திரைப்படத்தில் செங்கனி) 15 லட்சம் நிதியுதவி அளித்தார். இந்த நிகழ்ச்சி கம்யூனிஸ்ட் அலுவலகத்தில், கம்யூனிஸ்ட் தலைவர் பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

முதலில் இந்த விழா, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கனமழை, வெள்ளம் போன்ற காரணங்களால், முதல்வர் வெள்ள மீட்பு நடவடிக்கைகளை கண்காணிக்க சென்றுவிட்டார். இந்த நேரத்தில் முதல்வரை அழைத்தால் அது நன்றாக இருக்காது என்பதால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் முன்னிலையில் இந்த விழாவை முடித்துள்ளார் சூர்யா. உடன் அக்கட்சியின் தலைவர்கள் ஜி.ராமகிருஷ்ணன், கதையின் படி உண்மையில் போராடி ராசாக்கண்ணுவுக்கு நீதி வழங்க போராடிய கோவிந்தன் அவர்களும் உடன் இருந்தனர்.

இதற்கு முன்னர் முதலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், சூர்யாவிடம் பார்வதியம்மாளுக்கு நிதியுதவி அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. அந்த வகையில் இந்த நிதியுதவி நிகழ்வு நடைபெற்றுள்ளது.

மறைந்த ராசாகண்ணுவின் மனைவி பார்வதியம்மாளுக்கு நடிகர் சூர்யா சார்பில் 10 லட்சம் நிதியுதவியும், 2டி நிறுவனம் சார்பாக 5 லட்சம் நிதியுதவியும் பார்வதி அம்மாள் பெயரில் பிக்சர் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அந்த பணம் மீதான வட்டி தொகை, மாதம் மாதம் பார்வதியம்மாளுக்கு வந்து சேரும் படி வழிவகை செய்யப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.