டாக்டர் படம் வெளியாகும் தேதியில் ஜகமே தந்திரம் ரிலீஸ்..?

டாக்டர் படம் வெளியீட திட்டமிட்டிருந்த மார்ச் 26 ஆம் தேதி தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் “நெட்பிளிக்ஸ்” ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல்

இந்த ஆண்டு வருகின்ற ஏப்ரல்  ஏப்ரல் 6-ம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்ட சில படங்களின் குழப்பம் ஏற்பட்டு சில திரைப்படங்களின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படம் இந்த மாதம் 26 ஆம் தேதி வெளியாகவிருந்த நிலையில், நடைபெறவுள்ள தேர்தல் காரணமாக டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுவதாகவும் , படக்குழுவினர் அனைவரிடமும் பேசி விரைவில் டாக்டர் படத்தின் அடுத்த ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் சில நாட்களிற்கு முன்பு படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தார்கள்.

இந்த நிலையில் தற்போது டாக்டர் படம் வெளியீட திட்டமிட்டிருந்த மார்ச் 26 ஆம் தேதி தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் “நெட்பிளிக்ஸ்” ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரவி வருகிறது. விரைவில் இந்த ஜகமே தந்திரம் படம் எப்போது வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜகமே தந்திரம் படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ளார். y not studios தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்திலிருந்து வெளியான இரண்டு பாடல்கள் மற்றும் டீசர் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.