நடிகை வாணிபோஜனுக்கு அடித்த ஜாக்பாட்.! தளபதி-65 படத்தில ஜோடி இவரா.?

தளபதி-65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக வாணிபோஜன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தளபதி விஜய் மாஸ்டர் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் தனது 65-வது படத்தில் நடிக்கவுள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைக்கவுள்ளார் . மேலும் நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் பணியாற்ற உள்ளார் . மேலும் ‘தளபதி65’ படத்தில் பிரபல காமெடி நடிகர்களான யோகி பாபு மற்றும்VTV கணேஷ் ஆகியோரும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.மேலும் தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே அல்லது ரஷ்மிகா மந்தானா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.ஆனால் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் தளபதி 65 படத்தின் ஹீரோயின் குறித்த புது தகவல் வெளியாகியுள்ளது.அதாவது தளபதி 65 படத்தில் தளபதிக்கு ஜோடியாக வாணிபோஜன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . தற்போது பல படங்களை தன் கைவசம் வைத்திருக்கும் வாணிபோஜன் தற்போது வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த தகவல் எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.உண்மையெனில் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.