புலம்பெயர் தொழிலாளர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்துவது மத்திய அரசின் கடமை – ராகுல் காந்தி

புலம்பெயர் தொழிலாளர்கள் மீண்டும் புலம்பெயர தொடங்கிவிட்டார்கள். இத்தகைய இக்கட்டான சூழலில் அவர்களின் வங்கிக் கணக்குகளில் பணத்தை செலுத்துவது தான் மத்திய அரசின் பொறுப்பாகும்.

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் மிகத்தீவிரமாக பரவி வருகிறது.  இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை 1.50 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் வடமாநிலத்தில் இருந்து வேலைக்காக பல இடங்களில் தங்கி வேலை பார்த்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு புலம்பெயர தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அதில், ‘புலம்பெயர் தொழிலாளர்கள் மீண்டும் புலம்பெயர தொடங்கிவிட்டார்கள். இத்தகைய இக்கட்டான சூழலில் அவர்களின் வங்கிக் கணக்குகளில் பணத்தை செலுத்துவது தான் மத்திய அரசின் பொறுப்பாகும். ஆனால் தேவையான உதவி செய்யாமல், கொரோனா பரப்புவதாக மக்களை மத்திய அரசு குறை கூறுவதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.