பயப்படவேண்டிய விஷயத்திற்கு பயப்படாம இருப்பது முட்டாள்தனம்! கொரோனா குறித்து நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள வீடியோ!

 கடந்த சில நாட்களாகவே உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பு, இந்தியாவில்

By leena | Published: Mar 23, 2020 11:06 AM

 கடந்த சில நாட்களாகவே உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பு, இந்தியாவில் மட்டுமல்லாமல், தற்போது தமிழகத்திலும் மிக தீவிரமாக பரவி வருகிறது. இதுகுறித்து பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிற நிலையில், நடிகர் சூர்யா இதுகுறித்து ஒரு விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார். 

அந்த வீடியோவில், மக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியே செல்ல வேண்டும். பயப்படவேண்டிய விஷயத்திற்கு பயப்படாம இருப்பது முட்டாள்தனம் என்றும், மக்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வது சிறந்தது. நமக்காக பாடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களின் பணியை மதித்து, நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். 

 

Step2: Place in ads Display sections

unicc