இறைவனை வணங்க செல்பவர்கள் மனிதாபிமானத்துடன் இருப்பதுதான் முக்கியம்- மதுரைக்கிளை..!

திருச்சி திருவானைக்கோவில் உள்ள எல்லைப்பிடாரி அம்மன் கோவில் திருவிழாவில் அனைத்து தரப்பினரும் பங்கேற்கும் வகையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்து  திருவிழாவை நடத்த உத்தரவிடக்கோரி பத்மநாபன் என்பவர்  மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கோயில் என்பது மன அமைதிக்காக தான், மனிதர்கள் இடையே பாகுபாடு உருவாக்குவதற்காக அல்ல, இறைவனை வணங்க செல்பவர்கள் மனிதாபிமானத்துடன் இருப்பதுதான் முக்கியம். எந்தவித ஏற்றத்தாழ்வு, பாகுபாடும் கடவுள் பார்ப்பதில்லை. மனிதர்கள் மத்தியில் பாகுபாடு பார்ப்பதை கடவுள் ஏற்க மாட்டார். பொதுவான நம்பிக்கை கொண்ட அனைவரும் கோவிலுக்கு  வணங்குவதற்கான வசதியை செய்து தர வேண்டும். இந்த விசயத்தில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என தெரிவித்தனர்.

 

 

 

author avatar
murugan