, ,

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுவது சந்தேகமே – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

By

திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் டாஸ்மாக் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்தபின் டாஸ்மாக் இயங்கும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது என ஜெயக்குமார் குற்றசாட்டு. 

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள் பெரும்பாலானவை அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்றும், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தமிழ்நாடு அரசு பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொள்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் டாஸ்மாக் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்தபின் டாஸ்மாக் இயங்கும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் இமேஜை அளிக்க தமிழ்நாடு அரசு முயற்சி செய்து வருவதாகவும், காலச்சக்கரம் சுழலும் திமுக பதில் சொல்ல வேண்டிய நிலை வரும் என்றும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுவது சந்தேகமே என்றும் தெரிவித்துள்ளார்.

Dinasuvadu Media @2023