அடேங்கப்பா! ‘சார்பட்டா பரம்பரை 2’ படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு ஓடிடியில் வெளியான திரைப்படம் தான் ‘சார்பட்டா பரம்பரை’. இந்த திரைப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிகை துஷாரா விஜயன் நடித்து இருந்தார்.சஞ்சனா நடராஜன், ஆர்யா , ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், பசுபதி, ஜான் விஜய், பிரியதர்ஷினி ராஜ்குமார், அனுபமா குமார், கலையரசன் உள்ளிட்ட பல பிரபலங்களும் படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார். இந்த திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், கொரோனா பிரச்சனை காரணமாக படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. ஓடிடியில் படம் சூப்பர் ஹிட் ஆகி திரையரங்குகளில் வெளியாகவில்லயே என்ற வருத்தத்தை கொடுத்தது என்று கூட சொல்லலாம்.

சார்பட்டா -2வுக்காக வெறித்தனமாக தயாராகும் ஆர்யா! வைரலாகும் வீடியோ

அப்படி வருத்தம் அடைந்த ரசிகர்களுக்காகவே ‘சார்பட்டா பரம்பரை’ 2 படம் உருவாகவுள்ளதாகவும், அந்த படம் நேரடியாக திரையரங்குகளில் வெளியாகும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது நேற்று படத்திற்காக ஆர்யா தீவிரமாக பாக்சிங் பயிற்சி செய்யும் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்த நிலையில், தற்போது அதனை தொடர்ந்து தற்போது சார்பட்டா பரம்பரை 2 படம் எத்தனை கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, சார்பட்டா பரம்பரை 2 படம் மொத்தமாக 90 கோடி அளவில் பிரமாண்டமாக உருவாகவுள்ளதாம். ஆர்யா சினிமா கேரியரில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாகவும் இந்த படம் இருக்குமாம். விரைவில் படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவல்கள் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment