தமிழ்நாடு வருகிறார் பாஜக தேர்தல் பொறுப்பாளர்!

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு இம்மாதம் இறுதி அல்லது அடுத்த மாதம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவை தேர்தலுக்கான பணியில் ஒருபக்கம் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வரும் நிலையில், மறுபக்கம் பிரதான கட்சிகள் அனைத்தும் கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரச்சாரம், வாக்குறுதி மற்றும் வேட்பாளர்கள் தேர்வு என தேர்தலுக்கான பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதில், பல்வேறு கட்சிகளும் தங்கள் கட்சி தேர்தல் பொறுப்பாளர்களை மாநில, மாவட்ட வாரியாக அறிவித்து வருகின்றனர். அந்தவகையில், சமீபத்தில் ஆளும் பாஜக கட்சியும் தங்கள் கட்சியின் தேர்தல் பொறுப்பாளர்களை மாநில வாரியாக  அறிவித்திருந்தது. அதில் தமிழ்நாட்டுக்கான பாஜக தேர்தல் பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டது.

நாங்கள் ஏன் பாஜகவை விட்டு விலகினோம்.? அதிமுக முன்னாள் அமைச்சர் பரபரப்பு.!

அதன்படி, தமிழகத்திற்கு மாநில் தேர்தல் பொறுப்பாளராக அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளராக ஸ்ரீதர் ரெட்டி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் அரவிந்த் மேனன் 2014, 2017 உத்திர பிரதேச தேர்தல் வெற்றியில் முக்கிய பங்காற்றியவர். இதுபோன்று புதுச்சேரிக்கு மாநில பொறுப்பாளராக நிர்மல் குமார் சுரானா அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில், மக்களவை தேர்தலுக்கான பணிகள் சூடுபிடித்துள்ள நிலையில், பாஜக தேர்தல் பொறுப்பாளர் பிப்ரவரி முதல் வாரத்தில் தமிழகம் வருகை தருகிறார்.

நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அரவிந்த் மேனன் தமிழகம் வருகிறார். தமிழகத்தில் உள்ள அரசியல் சூழல், கூட்டணி, தொகுதி மற்றும் வேட்பாளர்கள் தேர்வு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார் என கூறப்படுகிறது. மேலும், தேசிய பொறுப்பாளர்கள் தமிழக பாஜக நிர்வாகிகளை முதற்கட்டமாக சந்திக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment