விஜய் படத்திற்கு நோ சொன்ன அனுஷ்கா? என்ன மேடம் இப்படி பண்ணிட்டீங்க!

Anushka Shetty நடிகை அனுஷ்கா தற்போது மீண்டும் உடல் எடையை குறைத்து பழைய நிலைமைக்கு திரும்பியுள்ளார். எனவே மீண்டும் அவருக்கு பட வாய்ப்புகள் குவியும் என கூறப்பட்டது. தற்போது அவர் மலையாளத்தில் ஒரு திரைப்படத்தில் கூட நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். சமீபத்தில் அந்த படத்தின் படப்பிடிப்பில் தான் அனுஷ்கா கலந்து கொண்டு இருந்தார். அப்போது தான் அவர் உடல் எடையை குறைத்த விஷயம் தெரிய வந்தது. 

READ MORE – அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியா! செம தில்லு தான் மேடம் உங்களுக்கு!

இந்த நிலையில், அந்த திரைப்படத்தை தொடர்ந்து அனுஷ்கா பெரிய படம் ஒன்றில் நடிக்கவே மறுத்துவிட்டதாக செய்திகள் வெளிவந்து இருக்கிறது. அது என்ன திரைப்படம் என்றால் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தி கோட் படத்தில் ஒரு பாடலில் நடனம் ஆடுவதற்காக அனுஷ்காவிற்கு வாய்ப்பு வந்ததாம்.

READ MORE – தனுஷ் மட்டும் அதை பண்ணலனா ‘அனிருத் அவ்வளவுதான்’…ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஓபன் டாக்!

ஆனால் சில காரணங்கள் அனுஷ்கா மறுத்துவிட்டாராம். உண்மையில் படத்தின் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் சம்மதம் தெரிவிக்கவில்லையா அல்லது சின்ன பாடல் தானே என்று அவர் மறுத்துள்ளார் என்பது பற்றிய சரியான தகவல் வெளிவரவில்லை. இருந்தாலும் விஜய் படத்திலே அவர் நடிக்க மறுத்த தகவல் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

read more- விஜயகாந்தை கோபப்படுத்திய ரவுடிகள்! படப்பிடிப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்?

அனுஷ்கா இதில் நடிக்க மறுத்த காரணத்தால் அந்த கதாபாத்திரத்தில் நடனம் ஆட வைக்க த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று அவரும் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. உண்மையில் அவர் நடனம் ஆடி இருக்கிறாரா இல்லையா என்பது படம் வெளியான பிறகு தான் தெரிய வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment