#Breaking: டிச.7 ஆம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளர்&இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல்!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தல் டிச. 7 ஆம் தேதியன்று  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவின் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.இந்த கூட்டத்தில், கட்சியின் சட்ட விதிகளில் திருத்தம் மற்றும் 11 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில்,அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் வருகின்ற டிசம்பர் 7 ஆம் தேதியன்று நடைபெறும் என்றும்,8 ஆம் தேதியன்று அதன் முடிவு அறிவிக்கப்படும் என்றும் அதிமுக தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,வேட்புமனு தாக்கல் டிச.3 ஆம் தேதி தொடங்கி 4 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக,வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

“பிரிவு – 2ன்படி “கழக அமைப்புகளின் பொதுத் தேர்தல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்திட வேண்டும்” என்ற விதிமுறைக்கேற்ப, கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் கீழ்க்கண்ட அட்டவணைப்படி நடைபெற உள்ளது.

தேர்தல் ஆணையாளர்கள்:

  • திரு. C. பொன்னையன் அவர்கள் கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர்.
  • முனைவர் பொள்ளாச்சி V. ஜெயராமன், M.L.A., அவர்கள் கழக தேர்தல் பிரிவுச் செயலாளர் முன்னாள் அமைச்சர்.

வேட்பு மனு தாக்கல்:

3.12.2021 வெள்ளிக் கிழமை முதல் 4.12.2021 சனிக் கிழமை (காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை).

வேட்பு மனு பரிசீலனை:

5.12.2021- ஞாயிற்றுக் கிழமை காலை 11.25 மணி

வேட்பு மனு திரும்பப் பெறுதல்

6.12.2021 திங்கட் கிழமை மாலை 4 மணி வரை.

தேர்தல் நாள்:

7.12.2021- செவ்வாய்க் கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை

வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவு அறிவிப்பு

8.12.2021 புதன் கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை’,என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

தோல்வி பயத்தால் ரேபரேலியில் களமிறங்கும் ராகுல் காந்தி.! பிரதமர் மோடி விமர்சனம்.!

Election2024 : தோல்வி பயத்தில் ரேபரேலியில் ராகுல் போட்டியிடுகிறார் என பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் களத்தில் இன்று ஓர் முக்கிய நிகழ்வு அரங்கேறியது.…

8 mins ago

மகாராஷ்டிராவில் கட்டுப்பாட்டை இழந்த பிரச்சார ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது.!

Helicopter crash : மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் தரையிறங்கும் போது ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா பெண் தலைவர் சுஷ்மா…

50 mins ago

ரேபரேலி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி.!

Election2024: ரேபரேலி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மக்களவை தேர்தலில் 2019ஆம் ஆண்டு போல இந்த முறையும் ராகுல் காந்தி…

1 hour ago

சுவிட்சர்லாந்த்தில் அமலுக்கு வரும் புதிய சட்ட திருத்தம் ! புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக அடுத்த நடவடிக்கை!

Switzerland : சுவிட்சர்லாந்த் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டு மக்களுக்கு ஆதரவாக தற்போது சுவிட்சர்லாந்த் அரசு சட்ட திருத்தும் செய்ய போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதே…

2 hours ago

எல்லா புகழும் புவனேஷ்வர் குமாருக்கு தான்! புகழ்ந்து தள்ளிய முகமது கைஃப்!

Bhuvneshwar Kumar : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட் எடுத்த புவனேஷ்வர் குமாரை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் …

2 hours ago

கத்திரி வெயிலை ஈடுகட்ட வருகிறது கோடை மழை.! கனமழையும் இருக்குங்க.. எங்க தெரியுமா?

Weather Update: கத்திரி வெயில் நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், மழை பெய்யும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,…

2 hours ago