இஸ்ரேல் – ஹமாஸ் போர்..! காசாவில் மேலும் 40 பேர் பலி.. 100 பேர் காயம்..!

நேற்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 40 பேர் உயிரிழந்ததாகவும், 100 பேர் காயமடைந்தனர் என ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசாவில் ஹமாஸ் ஆயுதக் குழுவினருக்கு எதிராக இஸ்ரேல் ராணுவத்தினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி முதல் தாக்குதல் நடைபெற்று வருகிறது. ஹமாஸ் குழுவினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையேயான போர் 4 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில் காசாவில் இதுவரை 29,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நகர சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், மத்திய காசா பகுதியில் நேற்று இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 40 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த தகவலை ஹமாஸ் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 22 -ம் தேதியான நேற்று டெய்ர் அல்-பலாஹ் நகரில் பல வீடுகளில் இஸ்ரேல் விமானங்கள் கொண்டு தாக்குதல் நடத்தி முற்றிலுமாக அழித்ததாக பாலஸ்தீன பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி நிறுவனம் சின்ஹுவா தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய தாக்குதலில் படுகாயமடைந்தவர்களை மீட்க ஆம்புலன்ஸ்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு குழுக்கள் சம்பவ இடத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. அல்-அக்ஸா மருத்துவமனையில் ஆயிரக்கணக்கானோர் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காயமடைந்து சிகிக்சை பெற்று வருகிறார்கள். இதனால் அந்த மருத்துவனை காயமடைந்த மக்களால் நிரம்பியுள்ளது.

 

author avatar
murugan

Leave a Comment