பிணை கைதிகள் பரிமாற்றம்.. மீண்டும் நீடிக்கப்பட்ட இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம்.!

இஸ்ரேல் – ஹமாஸ் போரானது கடந்த அக்டோபர் மாதம் துவங்கி 50 நாட்கள் கடந்து நடைபெற்று வந்தது. இதில் இஸ்ரேல் தரப்பில் 1400 பேரும், காசா நகரில் 14000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களும் உயிரிழந்தனர். இரு தரப்பில் இருந்தும் பலர் பிணை கைதிகளாக கொண்டு செல்லப்பட்டனர்.

இஸ்ரேல் ஹமாஸ் போரை நிறுத்த கோரி பல்வேறு நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அமெரிக்கா, எகிப்து , கத்தார் உள்ளிட்ட நாடுகள் மத்தியஸ்தலம் செய்த பிறகு 4 நாட்கள் போர் நிறுத்ததிற்கு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

நீடிக்கும் போர் நிறுத்தம்… 30 பாலஸ்தீன கைதிகள், 12 இஸ்ரேல் பிணைக் கைதிகள் விடுவிப்பு.!

இருந்தும் குறிப்பிட்ட அளவிலான பிணைக் கைதிகள் இருதரப்பில் இருந்தும் விடுவிக்கும் வரை இந்த போர் நிறுத்தம் தொடரும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இது தற்காலிக நிறுத்தம் மட்டுமே. மீண்டும் போர் துவங்கும் என்ற முடிவில் தான் இஸ்ரேல் ராணுவமும், ஹமாஸ் அமைப்பினரும் உள்ளனர்.

4 நாட்கள் போர் நிறுத்தத்திற்க்கு பின்னர் கத்தார் நாட்டின் மத்தியஸ்தலம் செய்ததன் காரணமாக மேலும் 2 நாட்கள் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. தற்போது இன்றோடு போர் நிறுத்தம் முடியும் தருவாயில் நாளை ஒருநாள் 7வது நாளாக மீண்டும் போர் நிறுத்தம் என இஸ்ரேல் ராணுவத்தினரும் , ஹமாஸ் அமைப்பினரும் அறிவித்துள்ளனர்.

6ஆம் நாள் வரையில், இஸ்ரேல் பிணைக் கைதிகள் 60கும் மேற்பட்டோரும், பாலஸ்தீனிய சிறை கைதிகள் 180 பேரும் விடுவிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று (வியாழன்) மேலும் 10 இஸ்ரேல் பிணை கைதிகளை ஹாமாஸ் அமைப்பினர் விடுவித்தனர். அவர்கள் அனைவரும் முகமூடி அணிந்து காசா -எகிப்து எல்லையில் உள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைப்பட்டனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.