வெயிலால் உங்க முகம் கருத்து போயிருச்சா? இதோ அதற்கான தீர்வு.!

Sun tan remove-சூரிய ஒளியால் ஏற்பட்ட கருமையை நீக்க எளிமையான  வீட்டு குறிப்புகளை இப்பதிவில் காணலாம் .

வெயில் காலம் வந்து விட்டாலே நம் அனைவரும் வீட்டை விட்டு வெளியே செல்ல பயப்படுவோம். அந்த அளவுக்கு சூரியன் நம்மை சுட்டெரித்து நம் முகத்தை கருக்கி விடும். இனிமே அந்த கவலை வேண்டாம்..  வெயிலில் சென்று  வந்த உடனே இந்த பேஸ் பேக்க போடுங்க..

சூரிய ஒளியால் ஏற்பட்ட கருமை நீங்க:

  • தக்காளியில் லைகோபின் உள்ளது. இது நம் சருமத்தை இயற்கையாகவே ப்ளீச்சிங் செய்யும் ,இறந்த செல்களை அகற்றி புதிய செல்களை உருவாக்கும்.
  • தக்காளியை இரண்டாக நறுக்கி ஒரு பகுதியில் சர்க்கரை தடவி முகத்தில் சுழற்சி முறையில் மசாஜ் செய்து கொள்ளவும்.
  • பிறகு தக்காளியை சாறை  எடுத்து அதனுடன் கடலை மாவு கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவினால் விரைவில் கருமை நீங்கும்.
  • தக்காளி சாறு இரண்டு ஸ்பூன், தேன் 2 ஸ்பூன், லெமன் அரை ஸ்பூன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவவும்.
  • மஞ்சள் தூள், கடலை மாவு, தயிர், உருளைக்கிழங்கு சாறு இவற்றை கலந்து முகத்தில் தடவி வர முகம் பளபளக்கும்.
  • பாலாடையுடன் மஞ்சள் தூளை கலந்து முகத்தில் தடவினால் முகத்தில் உள்ள கருமை நீங்குவதோடு மட்டுமல்லாமல், முகச்சுருக்கம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.
  • நுங்குடன் ,பன்னீர் ரோஜா இதழ்களை மசிந்து முகத்தில் தடவி வர முகம் பளிச்சென்று மாறும்.
  • சிவப்பு சந்தனம் மற்றும் முல்தானி மட்டி இவற்றுடன் பாதாம் ஆயில் அல்லது தேன் கலந்து முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

வெயில் காலத்தில்  சூரிய ஒளி படும்போது உடலில் உள்ள செல்கள் சூரிய  ஒளியை அதிக அளவு உட்கிரகித்துக் கொள்ளும்.பெரும்பாலும் முகம் மற்றும் கை  பகுதிகளை மறைப்பதில்லை, இதனால் முகதில்  கருமை நிறம் ஏற்படுகிறது. இதைப் போக்க இந்தக் குறிப்புகளை பயன்படுத்தினால் நல்ல மாற்றம் கிடைக்கும்.

author avatar
K Palaniammal
நான் பழனியம்மாள், இளங்கலை மனையியல் பட்டதாரியான நான் கடந்த ஆறு மாதங்களாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். லைஃப் ஸ்டைல், ஆன்மீகம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.