#CricketBreaking: சவுரவ் கங்குலி ஐசிசி யின் அடுத்த தலைவரா ?

ஐசிசி யின் தலைவர் பார்க்லேயின் பதவிக்காலம் இந்த ஆண்டு நவம்பரில் முடிவடைகின்ற நிலையில், சவுரவ் கங்குலி அதன் அடுத்த தலைவராக வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வாரியத்தின் தலைவராக தற்பொழுது கிரெக் பார்க்லே இருந்து வருகிறார், அவரின் பதவிக்காலம் இந்த ஆண்டு நவம்பர் மாதம் முடிவடைகிறது. பர்மிங்காமில் நடைபெற்ற கூட்டத்தில் ஐசிசியின் அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் குறித்து முடிவு செய்யப்பட்டது.

இதன்படி ஐசிசி தலைவரின் பதவிக்காலம் டிசம்பர் 2022 முதல் நவம்பர் 2024 வரை இரண்டு ஆண்டுகள் இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்தலில் 51 சதவீத வாக்குகளைப் பெறும் போட்டியாளர் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசியின் 16 உறுப்பினர்கள் கொண்ட வாரியத்தில் தலைவராகத்  தேர்ந்தெடுக்கப்படுவதற்கு இயக்குநர்களிடமிருந்து ஒன்பது வாக்குகள் தேவைப்படுகிறது.

ஐசிசி யின் ஆண்கள் கிரிக்கெட் கமிட்டியில் “தற்போதைய வீரர்” பிரதிநிதிகளாக இந்தியாவின் முன்னாள் சர்வதேச வீரரான விவிஎஸ் லட்சுமண் மற்றும் நியூசிலாந்து முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் “முன்னாள் வீரர்” பிரதிநிதிகளாக இலங்கையின் மஹேல ஜயவர்தனவும், மேற்கிந்திய தீவுகளின் ரோஜர் ஹார்பர் என்பவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பார்க்லேயின் பதவிக்காலம் முடிவடைந்த பிறகு சவுரவ் கங்குலி ஐசிசி யின் அடுத்த தலைவராக வருவதற்கு, அவருக்கு பல நாடுகள் ஆதரவாக வரக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பிசிசிஐ வட்டாரங்கள், இது குறித்து கூறும்போது தற்பொழுது எந்த முடிவுக்கும் வர முடியாது என்று கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

author avatar
Muthu Kumar

Leave a Comment