குசும்புக்கார கருப்பனா இது? புற்றுநோயால் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன நடிகர்!

கருப்பன் குசும்பன் எனும் வசனத்தால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான தவசி புற்றுநோயால் தற்பொழுது ஆளே அடையாளம் தெரியாமல் இருக்கிறார்.

தமிழ் திரை உலகில் பிரபலமான துணை நடிகராக வலம் வருபவர் தான் தவசி. இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், கொம்பன் உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். இவரை தவசி என்று சொல்வதைவிட கருப்பன் குசும்புக்காரன் எனும் ஒற்றை வசனத்தில் குறிப்பிட்டால் ரசிகர்களுக்கு தெரிந்துவிடும். முரட்டு மீசையுடன் கிராமத்து தோற்றத்தில் காணப்படக்கூடிய இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஒரு விபத்தில் சிக்கி உயிர் பிழைத்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்பொழுது இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப் போயிருக்கிறார். வாட்டசாட்டமான உடலுடன் முரட்டு மீசையுடன் இருக்கும் இவர் முகத்தில் மீசை இன்றி, முடியின்றி மிகவும் மெலிந்து எலும்பும் தோலுமாக காணப்படும். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தற்போது அதிர்ந்து போயுள்ளனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பணமின்றி அவதிப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் திரை உலகில் உள்ள நடிகர்கள் நிச்சயம் உதவுவார்கள் எனவும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Rebekal

Leave a Comment