கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப்போகிறாரா?… லெஜண்ட் கிரிக்கெட்டர் எடுத்த முடிவு.!

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப்போவதாக இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் கூறியுள்ளார்.

ஆஷஸ் டெஸ்ட்:

நடந்து வரும் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் ஒரேயொரு விக்கெட் மட்டுமே எடுத்த இங்கிலாந்து அணியின் லெஜண்ட் வீரரான வேகப்பந்துவீச்சாளர் ஆண்டர்சன், ஆஷஸ் தொடரின் மீதமுள்ள போட்டிகளும் இதேபோன்று ஃபிளாட் மைதானங்களாக இருந்தால் நான் அவ்வளவுதான், ஓய்வு பெற்றுவிடுவேன் என கூறியுள்ளார்.

“BazBall”:

இங்கிலாந்தில் நடந்து வரும் பாரம்பரிய மிக்க கிரிக்கெட் தொடரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பர்மிங்காமில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் உலக டெஸ்ட் சாம்பியனான ஆஸ்திரேலிய அணியிடம் வீழ்ந்தது. இதில் இங்கிலாந்து அணியின் “BazBall” கிரிக்கெட் முறை பலனளிக்கவில்லை.

டெஸ்ட் லெஜண்ட்:

இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்(686) வீழ்த்திய பவுலருமான ஜேம்ஸ் ஆண்டர்சன் ஒரு விக்கெட் மட்டுமே எடுத்துக்கொடுத்தார். இது அணிக்கு சற்று பின்னடைவாக அமைந்தது. மேலும் இதேபோன்று ஃபிளாட்(Flat) பிட்ச் மைதானம் தான் இனி வரும் 4 ஆஷஸ் போட்டிகளிலும் என்றால் நான் இத்துடன் எனது கிரிக்கெட்டை  முடித்துக்கொள்வேன் என ஆண்டர்சன் கூறியுள்ளார்.

ஃபிளாட்(Flat) பிட்ச்:

இது குறித்து ஆண்டர்சன் கூறும்போது, முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்ற மைதானம் வேகப்பந்துக்கு கைகொடுக்கவில்லை, நான் அனைத்து விதமான பிட்ச்களிலும் விளையாட எனது திறனை மேம்படுத்தியிருக்கிறேன். ஆனால் எனது அனைத்து முயற்சியும் பர்மிங்காமில் உதவவில்லை.

ஆஷஸ் தொடருடன் ஓய்வு:

எனது முயற்சிகள் அனைத்தும், பள்ளத்தில் இருப்பவர் மேட்டில் உள்ளவருடன் சண்டையிட முயல்வது போல் அமைந்தது. இதே போல் மீதமுள்ள மைதானத்தின் பிட்ச்கள் அமைந்தால் நான் ஆஷஸ் தொடருடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிடுவேன் என ஆண்டர்சன் மேலும் கூறியுள்ளார்.

40 வயதாகும் ஆண்டர்சன் இங்கிலாந்து அணியில் தற்போது டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார், இவர் இங்கிலாந்து டெஸ்ட் அணிக்காக 2003இல் அறிமுகமாகி தற்போது வரை 180 டெஸ்ட்களில் களமிறங்கியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிக போட்டிகளில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளரான ஆண்டர்சன், சச்சினுக்கு(200) அடுத்தபடியாக அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவரும் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Muthu Kumar