இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறதா? குறைகிறதா?

இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நேற்று 93,51,224 ஆக இருந்த நிலையில் இன்றைய நிலவரப்படி 93,92,919 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.நாளொன்றுக்கு 1 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 41,810 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் .மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 496 பேர் கொரோனாவுக்கு உயிரிழக்க 42,000-க்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.

எனவே மொத்தமாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,92,919-ஆக அதிகரித்துள்ளது.மேலும் இந்த கொரோனா தாக்கத்தால் 1,36,696 பேர் உயிரிழந்துள்ளனர்.அதே நேரத்தில் 88,02,267 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.மேலும் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4,53,956-ஆக உள்ளது . அனைவரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றினால் கொரோனாவை கட்டுபடுத்தி அதிலிருந்து மீண்டு வர முடியும்.