ஆதரவு அளிக்கும் இந்தியா ! ஆபத்தான போதைப்பொருள் பட்டியலில் இருந்து கஞ்சா நீக்கம்?

ஆபத்தான போதைப்பொருள் பட்டியலில் இருந்து கஞ்சாவை நீக்க ஐ.நா வில் நடந்த வாக்கெடுப்பில் முடிவு. இதற்கு இந்திய உள்ளிட்ட பல நாடுகள் ஆதரவாக வாக்களிப்பு.

சில நாடுகளில் கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் அரசாங்க அனுமதியுடன் பயன்படுத்து வந்தாலும், இந்திய உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு சில நாடுகளில் மருத்துவ பயன்பாட்டிற்கு கஞ்சாவை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் கஞ்சா மீது உள்ள தடையை நீக்க வேண்டும் என்று பலதரப்பட்ட கருத்துக்கள் தெரிவித்து வந்தனர்.

ஐ.நா.வின் போதை மருந்துகளுக்கான ஆணையம் வியன்னாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இதில் உலகில் உள்ள 53 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கின்றன. இந்நிலையில் ஆபத்தான போதைப்பொருள் பட்டியலில் இருந்து கஞ்சாவை நீக்குவது தொடர்பாக ஆணையம் சார்பில் தேர்தல் நடத்தப்பட்டது.

இந்த தேர்தலில் ஆபத்தான பொருட்களின் பட்டியலில் இருந்து கஞ்சாவை நீக்குவதற்கு, ஆதரவாக 27 நாடுகள் வாக்கு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை எதிர்த்து 25 நாடுகள் வாக்களித்துள்ளன என்றும் கூறப்படுகிறது. இதில், பெருபான்மையான வாக்குகள் பெற்றதால், கஞ்சாவை ஆபத்தான போதைப் பொருட்களின் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வாக்கெடுப்பில் இந்தியா மட்டுமல்லாமல் அமெரிக்கா, ஐரோப்பிய உள்ளிட்ட நாடுகள் கஞ்சாவை ஆபத்தான போதைப் பொருட்களின் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று ஆதரவு அளித்துள்ளது. ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்துள்ளன. மேலும். இந்த வாக்கெடுப்பில் உக்ரைன் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்