உலகிலேயே அதிக வெப்பநிலை உள்ள இடம் ஈரானின் லூட் பாலைவனமா..!

உலகத்தில் உள்ள அதிக வெப்பநிலை உள்ள பகுதியாக தற்போது ஈரானின் லூட் பாலைவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தால் உலகத்தில்  வெப்பநிலை அதிகரித்து கொண்டு வருகிறது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் டெத் வேலி என்ற இடம் உள்ளது. இதுவே இதற்கு முன் உலகத்தில் உள்ள மிக அதிகமான வெப்பநிலை கொண்ட இடமாக இருந்து வந்துள்ளது. அப்போது அந்த பகுதியில் கிட்டத்தட்ட 134 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் இருந்ததாக பதிவிட்டனர்.  தற்போது இந்த இடத்தை முறியடித்து ஈரானின் லூட் பாலைவனம் முன்னேறி சென்றுள்ளது.

இதன்படி, உலகத்தில் உள்ள மிக அதிகமான வெப்பப்பகுதியை தெரிந்து கொள்ளும் பொருட்டு ஈரானின் லூட் பாலைவனத்தையும், அமெரிக்காவின் சோனோரன் பாலைவனத்தையும் ஆராய்ச்சி செய்தனர். அதில் 177 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையை ஈரானின் லூட் பாலைவனம் பெற்று, உலகின் அதிக வெப்பநிலை கொண்ட பகுதியாக லூட் பாலைவனம் தேர்வாகியுள்ளது.