#IPL2020 இன்று மோதும் டெல்லி-பஞ்சாப்!!பாதகம்..சாதகம் ஒரு பார்வை !

#IPL2020 இன்று மோதும் டெல்லி-பஞ்சாப்!!பாதகம்..சாதகம் ஒரு பார்வை !

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 13-வது சீசன் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று தொடங்கி நடந்து வருகிறது. தொடரின் 2-வது நாளான இன்று துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி, கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இந்த ஆட்டம் அதிரடி பேட்டிங்கை உள்ளடக்கிய பஞ்சாப் அணியின் பேட்டிங் வரிசைக்கும், அதே போல வலுவான சுழற்பந்து வீச்சை கொண்ட டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் இடையிலான மோதலாகவே கிரிக்கெட் ரசிகர்களால் பார்க்கப்படுகிறது. சுழல் பந்து வீச்சாளர்களான ரவிச்சந்திரன் அஸ்வின், அமித் மிஸ்ரா, அக்சர் படேல் ஆகியோரை உள்ளடக்கிய சுழற்பந்து வீச்சு கூட்டணி பஞ்சாப் அணிக்கு கடும் சவால் தரக்கூடும் அதே போல் துபாய் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மறுபக்கம் டெல்லி அணியின் பேட்டிங்கிற்கு ஸ்ரேயஸ் ஐயர், பிருத்வி ஷா, ரிஷப் பந்த், ஷிகர் தவன், சிம்ரன் ஹெட்மைர், அஜிங்க்ய ரஹானே ஆகியோர் பலம் சேர்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியை எதிர்த்து விளையாடும்பஞ்சாப் அணியில் கிறிஸ் கெய்ல், கிளென் மேக்ஸ்வெல், கே.எல். ராகுல், நிக்கோலஸ் பூரன் ஆகியோர் அதிரடி வீரர்களாக உள்ளனர். இதில் மேக்ஸ்வெல் சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அதிரடியாக சதம் விளாசியதை அடுத்து அத்தொடரைக் கைப்பற்ற உறுதுணையாக இருந்தார்.அவரும் நல்ல ஃபர்மில் உள்ளார் என்பதை மறக்கக் கூடாது இவர்களுடன் மயங்க் அகர்வால், கருண் நாயர் என்று நம்பிக்கை அளிக்கக் கூடியவர்களாக உள்ளனர். சுழற்பந்து வீச்சில் முஜீப் உர் ரஹ்மான்,  முருகன் அஸ்வின், கிருஷ்ணப்பா கவுதம் ஆகியோர் கூடுதல் பலம் சேர்க்கக் கூடும். வேகப்பந்து வீச்சில் முகமது ஷமியின்  மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் சம பலத்துடன் இரு அணிகளும் திகழ்வதால் ரசிகர்களின் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.இந்த போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு  துபாயில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
அணி பட்டியல்
டெல்லி: ஸ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), ரவிச்சந்திரன் அஸ்வின், ஷிகர் தவன், பிருத்வி ஷா, சிம்ரன் ஹெட்மையர், காகிசோ ரபாடா, அஜிங்க்ய ரஹானே, அமித் மிஸ்ரா, ரிஷப் பந்த், இஷாந்த் சர்மா, அக்சர் படேல், சந்தீப் லாமிச்சன், மோஹித் சர்மா, அன்ரிச் நார்ட்ஜே, அலெக்ஸ் கேரி, அவேஷ் கான் மற்றும் துஷார் தேஷ்பாண்டே, ஹர்ஷல் படேல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், லலித் யாதவ். பஞ்சாப்: கே.எல்.ராகுல் (கேப்டன்), மயங்க் அகர்வால், ஷெல்டன் கோட்ரெல், கிறிஸ் கெய்ல், கிளென் மேக்ஸ்வெல், முகமது ஷமி, முஜீப் உர் ரஹ்மான், கருண் நாயர், ஜேம்ஸ் நீஷாம், நிக்கோலஸ் பூரன், இஷான் பொரல், அர்ஷ்தீப் சிங், முருகன் அஷ்வின், கிருஷ்ணப்பா, ஹர்பிரீத் ப்ரார், தீபக் ஹூடா, கிறிஸ் ஜோர்டான், சர்ப்ராஸ் கான், மந்தீப் சிங், தர்ஷன் நல்கண்டே, ரவி பிஷ்னோய், சிம்ரன் சிங், ஜெகதீஷா சுசித், தஜிந்தர் சிங், ஹர்டஸ் வில்ஜோன்.  

Latest Posts

#IPL2020: டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு ! சென்னை அணியில் இரண்டு மாற்றங்கள்
மற்றவர்களை பேச விடாமல் பேசுவது நீங்கள் தான்.! அனிதாவை வறுத்தெடுக்கும் உலகநாயகன்.! 
பண்டிகை காலங்களில் படம் வெளியாவதில் அரசு தடை இல்லை - கடம்பூர் ராஜூ
#HeavyRain: தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை - வானிலை ஆய்வு மையம்
மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறினால் ரூ.1.21லட்சம் அபராதம்.! டெல்லி அரசு அதிரடி.!
ஹைதராபாத் உழவர் சந்தைகளில்ஒரு கிலோ வெங்காயம் ரூ .35க்கு விற்பனை.!
பயனாளர்களுக்கு அதிர்ச்சி..! இந்த சேவைக்கு இனி கட்டணம்..!
திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிர் அணி போராட்டம் - எல்.முருகன்
"சூரரை போற்று" படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
நவம்பர் 6 முதல் டிசம்பர் 6 வரை வேல் யாத்திரை- எல்.முருகன்..!