ஐபிஎல் போராட்ட வழக்கு ..!கருணாஸ் ஜாமீன் மனு தாக்கல்..!

போராட்ட வழக்கில் ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழக முதல்வர் மற்றும் காவல்துறையை சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தாற்காக அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டது.இந்நிலையில் சென்னை சாலி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து அவரை காவல் துறையினர் கைது செய்தனர்.பின்னர் கொலை முயற்சி பிரிவு மட்டும் நீக்கப்பட்டது.

செப்டம்பர் 23 ஆம் தேதி அதிகாலை அதிரடியாக கைது செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் வீட்டில் ஆஜர்படுத்தபட்டார்.பின்னர் நீதிபதி விசாரனைகளை முடிந்து விட்டு நடிகரும் ,சட்டமன்ற உறுப்பினருமமான கருணாஸ்க்கு வருகின்ற அக்டோபர் 5ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.பின்னர் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.

அதன் பின் அவதூறாக பேசிய வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள கருணாஸ் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார். சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் கருணாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

 

அதேபோல் அவதூறாக பேசிய வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் கருணாஸை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் காவல்துறை மனு தாக்கல் செய்யப்பட்டது. காவல்துறை தாக்கல் செய்த மனு  விசாரணைக்கு வந்தது.பின்னர் அந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.காவல்துறை தாக்கல் செய்த மனுவும் விசாரணைக்கு வந்தது.

ஜாமீன் மனு மற்றும் போலீஸ் காவல் தொடர்பான மனு விசாரணைக்காக எழும்பூர் நீதிமன்றத்தில் கருணாஸ் ஆஜரானார்.

பின் சட்ட மன்ற உறுப்பினர் கருணாஸை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுத்தது எழும்பூர் நீதிமன்றம்.

அதேபோல் சென்னையில் பதிவு செய்யப்பட்டிருந்த 2 வழக்குகளில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் மீதும் கைது செய்யப்பட்டார்.

ஐபில் போட்டிக்கு எதிரான போராட்டத்தில் ரசிகர்களை தாக்கியது தொடர்பாக முக்குலத்தோர் புலிப்படை மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்த தாக்குதல் தொடர்பாக கருணாஸ் மீதும் திருவல்லிக்கேணி போலீசார் கருணாஸ் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். சென்னையில் பதிவு செய்யப்பட்டிருந்த மேலும் 2 வழக்குகளில் எம்எல்ஏ கருணாஸ் கைது செய்யப்பட்டார்.இந்நிலையில் ஐபிஎல் போராட்டம்  தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் கருணாஸ்  மீண்டும் ஆஜரானர்.

ஆஜரான பிறகு  ஐபிஎல் போட்டியின்போது தடையை மீறி ஊர்வலம் சென்ற வழக்கில் சட்டமன்ற உறுப்பினர்  கருணாசுக்கு அக்டோபர் 4 வரை நீதிமன்றக்காவல் நீட்டிக்கப்பட்டது.அதேபோல் ஐபிஎல் போட்டியின் போது ரசிகர்களை தாக்கியதாக கருணாஸ் மீது கொலை முயற்சி வழக்கு பதிய போதிய முகாந்திரம் இல்லை.இந்த புகாரில் கருணாசை சிறையில் அடைக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

இந்நிலையில்  ஐபிஎல் போராட்ட வழக்கில் ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் மனு தாக்கல் செய்துள்ளார்.

Recent Posts

IPL2024: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் திரில் வெற்றி..!

IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

5 hours ago

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

10 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

10 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

10 hours ago

உருவாகிறது பயோபிக்! அண்ணாமலையாக நடிக்கும் விஷால்?

Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…

11 hours ago

கொளுத்தும் வெயிலில்.. இந்த 6 மாவட்டத்திற்கு அடுத்த 3 மணி நேரத்தில் கோடை மழை.!

Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…

11 hours ago