#IPL Breaking: சிக்ஸர் மழை பொழிந்த லக்னோ… ஹைதராபாத்தை பந்தாடி அபார வெற்றி.!

ஐபிஎல் தொடரின் இன்றைய SRH vs LSG போட்டியில், லக்னோ அணி 7 விக்கெட் வித்யாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் ஹைதராபாத்தின் ராஜூவ் காந்தி ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

இதன்படி களமிறங்கிய ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர்கள் அபிஷேக் சர்மா (7), அன்மோல்பிரீத் சிங் (36) ரன்களில் ஆட்டமிழக்க, முக்கிய வீரர்கள் திரிபாதி(20), மார்க்ரம்(28) மற்றும் கிளென் பிலிப்ஸ்(0) ரன்கள் என நிலைத்து நின்று ஆடாமல் விக்கெட்களை இழந்தனர்.

ஹென்ரிச் கிளாசன்(47 ரன்கள்) மற்றும் அப்துல் சமத்(37* ரன்கள்) இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. லக்னோ அணி சார்பில் க்ருனால் பாண்டியா 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

183 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணிக்கு அதிர்ச்சியாக கைல் மயர்ஸ்(2) ரன்னுக்கு அவுட் ஆனார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிகாக்(29) ரன்கள் மட்டுமே எடுக்க, அதன்பின் பேட் செய்ய வந்த மன்கட் மற்றும் ஸ்டோனிஸ் இருவரும் இணைந்து பொறுப்புடன் தேவையான பந்துகளில் மட்டும் ரன்கள் குவித்து வந்தனர்.

அதிரடி காட்டிவந்த ஸ்டோனிஸ் 40 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, பூரன் இறங்கியவுடன் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடிக்க, பூரன் மற்றும் மன்கட் இருவரும் இணைந்து சிக்ஸர் மழை பொழிந்து வாணவேடிக்கை காட்டினார். இருவரின் அதிரடியால் லக்னோ அணி 19.2 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து இலக்கை எட்டியது.

இதனால் லக்னோ அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இறுதிக்கட்டத்தில் மன்கட் 64* ரன்களும், பூரன் 44* ரன்களும்(13 பந்துகள்) எடுத்து அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினர்.

author avatar
Muthu Kumar