சிறிய சேமிப்பு திட்டகளுக்கான வட்டி குறைப்பு அறிவிப்பு வபாஸ்…! – நிர்மலா சீதாராமன்

சிறிய சேமிப்பு திட்டகளுக்கு வட்டி குறைப்பு அறிவிப்பு வாபஸ் பெறப்படுவதாக நிர்மலா சீதாராமன் ட்வீட்.

மத்திய அரசு பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்கள் மற்றும் முதலீட்டு திட்டங்களை வழங்கி வருகிறது. உதாரணமாக மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம், சுகன்யா சம்ரிதி திட்டம், கிஷான் விகாஸ் பத்ரா, தேசிய சேமிப்புப் பத்திரங்கள், தபால் அலுவலக சேமிப்பு என பல திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது.  இந்த அறிவிப்பு திரும்பப் பெறுவதாக சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திய அரசாங்கத்தில் அனைத்து சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் ஏற்கனவே 2020-21 கடைசி காலாண்டில் இருந்த விஷயத்திலேயே தொடரும் என்று நேற்று வெளியிடப்பட்ட புதிய வட்டி விகித அறிவிப்பு வாபஸ் பெறப்படுகிறது என்றும் பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.