வேளாண் சட்டத்திற்கு எதிராக வலுக்கும் போராட்டம்…! மத்திய அரசிற்கு எச்சரிக்கை விடுக்கும் விவசாயிகள்..!

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யவில்லை என்றால், நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த போவதாக, மத்திய அரசிற்கு விவசாயிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து, தலைநகர் டெல்லியில் விவாசயிகள் 3 மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவசாயிகளுடன், மத்திய அரசு பல கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியுள்ள நிலையில், இதுவரை இந்த போராட்டத்திற்கு எந்த தீர்வும்  எட்டப்படவில்லை.

இந்நிலையில், குடியரசு தினத்தன்று, விவசாயிகள் நடத்திய ட்ரைட்ட்ற பேரணியில் பெரும் சர்ச்சை வெடித்ததை தொடர்ந்து, பல விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, தற்போது புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யவில்லை என்றால், நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த போவதாக, மத்திய அரசிற்கு விவசாயிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.