வங்கதேச சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி அறிவிப்பு.!

வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி, டிசம்பர் மாதம் வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்திய அணி, இரு 4-நாள் பயிற்சி போட்டிகளில் விளையாடுகிறது. ஒருநாள் தொடர் மற்றும் பயிற்சி போட்டிகளில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரில் இடம்பெற்றிருந்த ரவீந்திர ஜடேஜா மற்றும் யஷ் தயாள் காயம் காரணமாக நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் குல்தீப் சென் மற்றும் ஆல்ரவுண்டர் ஷாபாஸ் அஹ்மது சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய ஒருநாள் அணி: ரோஹித் சர்மா (C), கேஎல் ராகுல் (VC), ஷிகர் தவான், விராட் கோலி, ரஜத் பட்டிதார், ஷ்ரேயாஸ் ஐயர், ராகுல் திரிபாதி, ரிஷப் பந்த் (WK), இஷான் கிஷன் (WK), ஷாபாஸ் அகமது, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர் , முகமது. ஷமி, முகமது. சிராஜ், தீபக் சாஹர், குல்தீப் சென்

இந்திய ஏ(A) அணி முதல் 4-நாள்: அபிமன்யு ஈஸ்வரன் (C), ரோஹன் குன்னும்மாள், யஷஸ்வி ஜெய்ஸ்வால், யாஷ் துல், சர்ஃபராஸ் கான், திலக் வர்மா, உபேந்திர யாதவ் (WK), சவுரப் குமார், ராகுல் சாஹர், ஜெயந்த் யாதவ், முகேஷ் குமார், நவ்தீப் சைனி, அதித் ஷெத்

இந்திய ஏ(A) அணி 2ஆவது 4-நாள்: அபிமன்யு ஈஸ்வரன் (C), ரோஹன் குன்னும்மாள், யஷஸ்வி ஜெய்ஸ்வால், யாஷ் துல், சர்பராஸ் கான், திலக் வர்மா, உபேந்திர யாதவ் (WK), சவுரப் குமார், ராகுல் சாஹர், ஜெயந்த் யாதவ், முகேஷ் குமார், நவ்தீப். சைனி, அதித் ஷெத், சேதேஷ்வர் புஜாரா, உமேஷ் யாதவ், கேஎஸ் பாரத் (WK)

author avatar
Muthu Kumar

Leave a Comment