#தேயிலை#நிறுவனங்களின் உரிமம் ரத்து! இந்திய தேயிலை வாரியம் அதிரடி

தமிழகம் மற்றும் கேரளாவில் 16 உரநிறுவனங்கள் மற்றும் 2 தேயிலை தொழிற்சாலைகள் என்று மொத்தம் 18 நிறுவனங்களின் உரிமத்தை இந்திய தேயிலை வாரியம் ரத்து அதிரடி உத்தரப்பிறப்பித்துள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள இந்திய தேயிலை வாரியம் சார்பாக தென் மாநிலங்களில் உள்ள தேயிலை உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்த தர உறுதிப்படுத்தும் வகையில் பல கட்டுப்பாடு ஆணைகளின் கீழ் ஒழுங்குமுறை நடவடிக்கையினை அதிரடியாக எடுத்து வருகிறது.

இந்நடவடிக்கையின் பெயரில் தமிழகத்தில் கோவை, அன்னூர், மேட்டுப்பாளையம், கேரளாவில், பாலக்காடு, எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள தேயிலை உற்பத்தி நிறுவனங்கள், கிடங்குகள், உயிர் உரம் உற்பத்தி நிறுவனங்களில் கலப்படம், உற்பத்தி விபரம் குறித்து  ரகசிய ஆய்வு செய்தது.

ஆய்வு தொடர்பாக  அவ்வாரிய செயல் இயக்குநர் பாலாஜி கூறுயுள்ளதாவது :தமிழகம், கேரளாவில், தேயிலை கழிவுகளை கொண்டு உரம் தயாரிப்பதாக  22 நிறுவனங்களுக்கு ஷோகாஸ் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதில் பெறப்பட்ட தகவல்களுக்கு உரிய தகவல் எதுவும் இல்லாமலும், சரிவர கணக்கு பராமரிக்காதது கண்டறியப்பட்டது.இதனால் சம்பந்தப்பட்ட  16 உர யூனிட்கள் மற்றும் நீலகிரி மாவட்டம் கேத்தியில் உரிமம் பெறாத தேயிலை தூள் தயாரித்த தொழிற்சாலை, தேனிமாவட்டத்தில் கணக்கு பராமரிக்காத தொழிற்சாலை என மொத்தமாக 18 நிறுவனங்களின் உரிமம் ஆனது ரத்து செய்யப்பட்டதாக தகவல் தெரிவித்துள்ளார்.

author avatar
kavitha