பிரிட்டன் பிரதமர் போட்டியில் இந்திய வம்சாவளி முன்னிலை

பிரிட்டன் பிரதமர் போட்டியில் தொடந்து முன்னிலையில்  ரிஷி சுனக்.

பிரிட்டன் நாட்டில் கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சி நடத்தி வரும் நிலையில், கட்சியினரின் கடும் அழுத்தம் காரணமாக பிரிட்டன் நாட்டின் பிரதமர் பதவியை, போரிஸ் ஜான்சன் ஜூலை 7ஆம் தேதி ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், புதிய பிரதமரை தேர்வு செய்வதில் தீவிர முனைப்பு காட்டி வருகிறது கன்சர்வேடிவ் கட்சி.

புதிய பிரதமர் பதவிக்கான போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் என்பவரும் முன்னணி வேட்பாளராக உள்ளார். இவரைத் தொடர்ந்து பென்னி மோர்டவுன்ட் மற்றும் லிஸ் டிரஸ் ஆகியோரும் இறுதி பட்டியலில் உள்ளனர்.

 

மேலும், 2015ல் ரிஷி சுனக் ரிச்மன்ட் பகுதியின் எம்பியாகவும், பிரதமர் தெரேசா மேவின் அரசில் அமைச்சராகவும் பணியாயுள்ளார்.

2019ல் நிதித்துறை தலைமை செயலாளராகவும், 2020ஆம் ஆண்டில் பிரதமர், துணை பிரதமர் ஆகியோருக்கு அடுத்த அந்தஸ்தில் இருக்கும் அமைச்சரவை பதவி ரிஷி சுனக்கிற்கு வழங்கப்பட்டது.

கோவிட் காலத்தில் ரிஷி சுனக் நிதித்துறையில் செய்த நடவடிக்கைகள் அவருக்கு பாராட்டுகளை தந்துள்ளது.

ரிஷி சுனக் பிரதமர் போட்டியில் வெற்றி பெரும் பட்சத்தில் பட்சத்தில், இந்தியாவை ஆட்சி செய்த பிரிட்டனில், இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் ஆட்சி செய்கிறார் என்ற பெருமை கிடைக்கக்  கூடும்.

 

author avatar
Varathalakshmi

Leave a Comment