ஆப்கானில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட இந்தியர்…! MEA தகவல்…!

ஆப்கானில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட இந்தியர்.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய நாள் முதற்கொண்டு ஆப்கானிஸ்தான் நாடே பதற்றமான நிலை தான் காணப்படுகிறது. அங்கு பெண்கள், முன்னாள் அரசுத் துறை ஊழியர்கள் மற்றும் அந்நாட்டைச் அல்லாதவர்கள் என பல தரப்பினருக்கும் அச்சுறுத்தல் நிலவி வருகிறது.

இந்நிலையில் ஆப்கானில் வசித்து வரும் இந்தியாவை பூர்விகமாக கொண்ட இந்து ஒருவர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியானது. பன்சிரி லால் அரெண்டே என்பவர் மருந்து கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவருக்கு வயது 50. இவர் ஒரு ஆப்கான் வம்சாவளியை சேர்ந்த இந்தியர் ஆவார்.

இந்து மதத்தை சேர்ந்த இவர் நேற்று இரவு 8 மணி அளவில் தனது கடையில் இருந்துள்ளார் அப்போது தனது கடையயில் ஊழியர்களுடன் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு துப்பாக்கிகளுடன் வந்தவர்கள் சிலர் பன்சிலால் மற்றும் அவரின் கடை ஊழியர்களை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுள்ளனர்.

பன்சிலால் கடத்தப்பட்ட நிலையில், அவருடைய கடை ஊழியர்கள் கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பி வந்ததாகவும் அவர்களை ஈவு இரக்கமின்றி கடத்தல்காரர்கள் தாக்கியதாகவும் தெரியவந்துள்ளது. இந்தியர் கடத்தபட்டது குறித்து ஆப்கனில் உள்ள சீக்கிய இந்து அமைப்பினர் தெரிவித்ததாக இந்திய உலக போரம் அமைப்பின் தலைவர் புனீத் சிங் சந்தோக் இந்திய வெளியுறவுத்துறைக்கு தகவல் கூறியிருப்பதுடன், உடனடியாக தில் தலையிட்டு கடத்தப்பட்ட இந்தியரை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

கடத்தப்பட்ட பன்சிலால் பன்சிரி லாலின் குடும்பத்தினர் டெல்லி அருகேயுள்ள பரீதாபாத் பகுதியில் வசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், கடத்தல் சம்பவம் தொடர்பாக, உள்ளூர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும், அவரை தேடுவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.