டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா இந்தியா முதலிடம்..!

இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையே முதல் டெஸ்ட் போட்டி கடந்த 2-ம் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. இதில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. மேலும் இந்த டெஸ்ட் போட்டி உலக சாம்பியன்ஷிப்புக்கு  உட்பட்டது என்பதால் இதன் மூலம் இந்திய அணிக்கு 40 புள்ளிகள் கிடைத்தது.
இதனால் சாம்பியன்ஷிப் பட்டியலில்  இந்திய அணி 160 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்திய அணி விளையாடிய  3 டெஸ்டிலும் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது.அடுத்த இடத்தில் நியூசிலாந்து , இலங்கை அணிகள் தலா இரண்டு போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் வெற்றியும் , ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்து 60 புள்ளிகள் உடன் உள்ளன. தென் ஆப்பிரிக்கா அணிக்கு இது தான் முதல் போட்டி என்பதால் இன்னும் புள்ளி பட்டியலில் இடம் பெறாமல் உள்ளது.

author avatar
murugan