இறுதியில் அதிரடி காட்டிய கோலி.. மிரண்டு போன விண்டிஸ் பந்துவீச்சாளர்கள்..!

  • டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
  • இந்திய அணி 3 விக்கெட்டை இழந்து, 240 ரன்கள் அடித்தது. இதில் அதிகபட்சமாக கே.எல் ராகுல் 91 ரன்கள் குவித்தார்.

இந்திய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிய மேற்கிந்திய தீவுகள் அணி, 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் நடந்து முடிந்த நிலையில், இன்று மூன்றாம் போட்டி நடைபெற்று வருகிறது.

மும்பையில் நடந்து வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா-ராகுல் களமிறங்கினார். இவர்கள் இருவருமே தங்களின் அதிரடி ஆட்டத்தினால் அரை சதம் விளாசினார்.

135 ரன்கள் வரை ஒரு விக்கெட் கூட விலாமல் இருந்தது. 71 ரன்கள் எடுத்து ரோஹித் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதனையடுத்து களமிறங்கிய பண்ட் 2 பந்துகளில் ஒரு ரன்கள் கூட எடுக்காமல் தனது விக்கெட்டை இழந்தார். இறுதியில், ராகுலுடன் விராட் கோலி இணைந்தார்.

இருவரும் வெறித்தனமாக ஆடி வந்தனர். இதில், 20 பந்துகளில் இந்திய அணியின் கேப்டன் கோலி, அரைசதம் அடித்தார். அதன்பின் ராகுல் வெளியேற, இறுதி பந்தில் சீஸ்சருடன் முதல் இன்னிங்க்ஸை 3 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 240 ரன்கள் அடித்து நிறைவேற்றியது.

இதில் அதிகபட்சமாக ராகுல் 91 ரன்கள் அடித்தார். 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் விண்டிஸ் அணி களமிறங்க உள்ளது.