வடகொரியாவுக்கு 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள மருத்துவ உதவிகளை செய்ய இந்தியா முடிவு

உலக சுகாதார நிறுவனத்தின்  (WHO) வேண்டுகோளின் படி   இந்தியா சுமார் 1 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள மருத்துவ உதவியை வட கொரியாவுக்கு வழங்க உள்ளது  என்று வெளியுறவு அமைச்சகம்    தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம்    வெளியிட்டுள்ள அறிவிப்பில்,வடகொரியாவின்  மருத்துவ விநியோக  பற்றாக்குறையை இந்தியா உணர்கிறது மற்றும் காசநோய் எதிர்ப்பு மருந்துகளின் வடிவத்தில் 1 மில்லியன் அமெரிக்க டாலர் மனிதாபிமான உதவிகளை வழங்க முடிவு செய்துள்ளது  என்று  தெரிவித்துள்ளது.

வட கொரியாவிற்கு செய்யப்படும் மருத்துவ உதவி உலக சுகாதார நிறுவனத்தின்  காசநோய் தடுப்பு திட்டத்தின் கீழ் உள்ளது என்று அமைச்சகம்  தெரிவித்துள்ளது.