பெண்கள் டி20 உலகக்கோப்பை: இன்று இந்தியா ,பங்களாதேஷ் மோதல் .!

  • பெண்களுக்கான உலக கோப்பைதொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.
  • இந்தியா ,பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றனர்.இந்த  போட்டி W.A.C.A. மைதானத்தில் மாலை  04.30 மணிக்கு நடைபெற உள்ளது.

பெண்களுக்கான உலக கோப்பைதொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ்  உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.இன்றைய போட்டியில் இந்தியா ,பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றனர். இந்த  போட்டி W.A.C.A. மைதானத்தில் மாலை  04.30 மணிக்கு நடைபெற உள்ளது.

பங்களாதேஷ் அணி முதல் முறையாக களம் காண உள்ளது.இந்தியா அணிக்கு இன்றைய போட்டி இரண்டாவது போட்டியாகும். முதல் நாள் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா அணியும் ,  ஆஸ்திரேலியா அணியும் மோதியது.

அந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இந்தியா அணி வெற்றியுடன் தொடரை தொடரை தொடங்கியது.

author avatar
Dinasuvadu desk