IND VS NZ: நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி 20 போட்டி.! தொடரை கைப்பற்றுமா இந்தியா.?

  • இந்திய அணி நியூசிலாந்து நாட்டில் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரில் 5 டி20, 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் மோதுகின்றன.
  • இந்த தொடரில் இந்திய அணி 5 டி20 போட்டிகளில், முதல் இரண்டு டி20 போட்டிகள் அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது. இன்று மூன்றாவது டி20 போட்டி செடன் பார்க், ஹாமில்டன் என்ற மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்திய அணி நியூசிலாந்து நாட்டில் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரில் 5 டி20, 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் மோதுகின்றன. இந்த தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் முதலில் 5 டி20 போட்டிகளை விளையாடி வருகின்றது. அதில் ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் இரண்டு டி20 போட்டிகளை இந்திய அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகளில் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2:0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், மூன்றாவது டி20 போட்டி செடன் பார்க், ஹாமில்டன் என்ற மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இரு அணிகளும் பலப்பரீட்சை செய்கிறது. இந்திய அணி ஏற்கனவே இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலை வைக்கிறது. அதனால் இந்த போட்டியை வென்று தொடரை கைப்பற்ற மும்மரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. நியூசிலாந்து அணி சொந்த மண்ணியில் இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவியதால் பின்னிலை வைக்கிறது. அதனால் நியூசிலாந்து அணி இந்த போட்டியை வெற்றி பெற்றே ஆகவேண்டும் என தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதனால் இன்று நடக்கும் போட்டி இரு அணிக்கும் நடக்கும் பலப்பரீட்சை மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்