INDvsBAN TestSeries: குல்தீப் யாதவ், சிராஜ் அபார பந்துவீச்சில் சுருண்ட வங்கதேசம்.!

இந்தியா-வங்கதேசம் மோதும் முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸ் முடிவில் வங்கதேசம் 150 ரன்கள் குவிப்பு.

இந்தியா-வங்கதேசம் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 410 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணியில் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்துவந்தது, இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் குவித்திருந்தது. இந்திய அணியை விட, வங்கதேச அணி 271 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்தது.

தொடர்ந்து விளையாடிய 3 ஆவது நாளில் சில நிமிடங்களிலேயே மீதமுள்ள இரண்டு விக்கெட்களையும் அந்த அணி இழந்தது. அனைத்து விக்கெட்களையும் இழந்து வங்கதேச அணி 150 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக முஸ்பிக்கர் ரஹிம் 28 ரன்களும், லிட்டன் தாஸ் 24 ரன்களும், மெஹதி ஹசன் 25 ரன்களும் குவித்தனர்.

இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்களும், சிராஜ் 3 விக்கெட்களும்,  வீழ்த்தினர். இந்திய அணியை விட, வங்கதேச அணி 254 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருக்கிறது.

author avatar
Muthu Kumar

Leave a Comment