இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 360 பேருக்கு கொரோனா பாதிப்பு.!

உலகம் முழுதும் பேரழிவை உண்டாக்கிய கொரோனாவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கடந்த சில காலமாக குறைந்து வருகிறது.

  • இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 360 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
  • நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 6,046 ஆக பதிவாகியுள்ளது.
  • இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,591 பேர் ஆக உள்ளது.
  • இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,33,433 ஆக பதிவாகியுள்ளது.
  • நாடு முழுவதும் இதுவரை 2,19,87,88,440 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.நேற்று ஒரே நாளில் 75,488 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
author avatar
Muthu Kumar

Leave a Comment