இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,326 பேருக்கு கொரோனா பாதிப்பு.!

உலகம் முழுதும் பேரழிவை உண்டாக்கிய கொரோனாவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கடந்த சில காலமாக குறைந்து வருகிறது.

  • இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,326 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
  • நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 17,912 ஆக பதிவாகியுள்ளது.
  • இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,29,024 பேர் ஆக உள்ளது.
  • இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,06,656 ஆக பதிவாகியுள்ளது. நேற்று ஒருநாளில் மட்டும் 1,723 பேர் குணமடைந்துள்ளனர்.
  • நாடு முழுவதும் இதுவரை 2,19,63,82,882 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.நேற்று ஒரே நாளில் 25,433  டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
author avatar
Muthu Kumar

Leave a Comment