31.1 C
Chennai
Saturday, June 10, 2023

மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் பணியிடைநீக்கம்… பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு.!

தமிழகப்பள்ளி மாணவர்கள் தேசிய விளையாட்டுப்போட்டிகளுக்கு கலந்து கொள்ளாத விவகாரத்தில்...

புதுச்சேரி காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் நியமனம்… கார்கே.!

புதுச்சேரிக்கு காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் எம்.பி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த...

இனிமேல் பக்காவான ரைடு..அறிமுகமானது ‘ஹோண்டா டியோ எச்-ஸ்மார்ட்’..! விலை எவ்வளவு தெரியுமா..!

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம், ஹோண்டா டியோ எச்-ஸ்மார்ட் ஸ்கூட்டரை...

புத்தகத்தில் ‘லவ் லெட்டர்’…நடிகை சாய் பல்லவிக்கு அடி உதை… வெளியான சீக்ரெட்ஸ்..!!

 தனது காதல் கதையை பற்றி நடிகை சாய் பல்லவி சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார். 

நடிகை சாய் பல்லவி தனது மனதிற்கு தோன்றும் விஷயங்களை வெளிப்படையாக பேசுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய பள்ளி பருவ காதல் கதையை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய நடிகை சாய் பல்லவி” நான் 7-ஆம்  வகுப்பு படிக்கும் போதே என்னுடைய  வகுப்பில் படிக்கும் மாணவர் ஒருவரை விரும்ப ஆரம்பித்தேன்.

SaiPallavi
SaiPallavi [Image source : twitter/ @baraju_SuperHit]

அந்த பையனை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவரிடம் என்னுடைய காதலை வெளிப்படுத்த விரும்பினேன். ஆனால்,  நேரடியாகச் சொல்ல பயந்து காதல் கடிதம் ஒன்றை எழுதினேன். ஆனால் அந்த கடிதத்தை என்னால் அவரிடம் கொடுக்கவே முடியவில்லை.

SaiPallavi
SaiPallavi [Image source : twitter/ @GlamshamGlitz]

அந்த கடிதத்தை நான் என்னுடைய புத்தகத்தில் வைத்திருந்தேன். அதனை என்னுடைய அம்மா  தற்செயலாக பார்த்து மிகவும் கோபம் அடைந்தார். பிறகு எனக்கு அடி, உதை கிடைத்தது. பிறகு என்னுடைய  அம்மாவிடம் நான் எந்த தவறும் செய்யவில்லை என புரிய வைத்தேன். அது தான் என்னுடைய அம்மா என்னை அடித்த முதல் முறையும், கடைசி முறையும்”. என்று கூறினார். மேலும் பேசிய அவர் குழந்தைகளை நல்ல வழியில் நடத்தும் ஒவ்வொரு தாயும் குழந்தைகளுக்கு ஹீரோ தான்” எனவும்  கூறியுள்ளார்.

SaiPallavi
SaiPallavi [Image source : twitter/ @popcorn553]

மேலும், நடிகை சாய் பல்லவி தற்போது தமிழில் சிவகார்த்திகேயனின் 21-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.