இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 26,964 பேருக்கு கொரோனா பாதிப்பு;34,167 பேர் குணமடைவு..!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 26,964 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 383 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,35,31,498 ஆக உள்ளது.

  • கடந்த 24 மணி நேரத்தில் 26,964 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 800 அதிகம்.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,35,31,498 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 383 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,45,768 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • தொற்றில் இருந்து ஒரே நாளில் 34,167 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,27,83,741 ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,01,989 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • நாடு முழுவதும் இதுவரை 82,65,15,754 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.