டாப் லிஸ்டில் தனுஷ்….5-வது இடத்தில் சமந்தா.! தற்போது வெளியான ஆச்சர்ய சர்வே ரிப்போர்ட்.!

இண்டர்நெட் மூவி டேட்டாபேஸ் – என்ற ஐஎம்டிபி (IMDb) நிறுவனம் வருடம் வருடம் பிரபலமான நடிகர்கள், நடிகைகள், மற்றும் படங்களின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில்ம் இந்த ஆண்டு இந்த டிசம்பருடன் நிறைவடையவுள்ள நிலையில், இந்த ஆண்டில் பிரபலமான நடிகர்கள், நடிகைகள் யார் யாரென்ற  விவரம் குறித்த 10 பிரபலமான இந்திய நட்சத்திரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

Dhanush New
Dhanush New Image Source Twitter

(IMDb) நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த 2022-ஆண்டுக்காண பட்டியலில் தமிழ் சினிமாவை சேர்ந்த தனுஷ் முதலிடத்திலும், நடிகை சமந்தா 5-வது இடத்தையும் பிடித்துள்ளனர். இதனையடுத்து ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

இதையும் படியுங்களேன்- ஒரே படத்தில் ஓட்டம் பிடித்த அழகு தேவதைகள்…? இந்த லிஸ்டில் அவங்களும் சிக்கிட்டாங்களே…!

இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்த தனுஷிற்கு இந்த வருடத்தில் மட்டும்  வாத்தி, தி க்ரே மேன, திருச்சிற்றம்பலம், நானே வருவேன் என 4 படங்கள் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு இவரது நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி திரைப்படமும் வெளியாகவுள்ளது.

Samantha Ruth Prabhu
Samantha Ruth Prabhu Image Source Twitter

இவரை போல, இந்த (IMDb) வெளியிட்டுள்ள பட்டியலில் நடிகை சமந்தா 5-வது இடத்தை பிடித்துள்ளார். சமந்தாவிற்கு இந்த ஆண்டு காத்து வாக்குல ரெண்டு காதல், யசோதா ஆகிய இரண்டு படங்கள் வெளியாகியுள்ளது. இந்த மாதம் இறுதியில் இவர் நடித்த குஷி திரைப்படமும் வெளியாகவுள்ளது.

(IMDb) 2022 10 பிரபலமான இந்திய நட்சத்திரங்களின் பட்டியல் :

1. தனுஷ்
2. அலியா பட்
3. ஐஸ்வர்யா ராய்
4. ராம் சரண்
5, சமந்தா
6. ஹ்ரித்திக் ரோஷன்
7. கியாரா அத்வானி
8. என்.டி.ஆர்
9. அல்லு அர்ஜுன்
10. யாஷ்

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment