தரமற்ற புளியந்தோப்பு குடியிருப்பில் ஐஐடி நிபுணர்கள் நேரில் ஆய்வு!

தரமற்ற முறையில் கட்டப்பட்டதாக எழுந்த புகாரில் சென்னை புளியந்தோப்பு குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் ஐஐடி குழு அதிகாரிகள் நேரில் ஆய்வு.

சென்னை புளியந்தோப்பில் தரமற்ற முறையில் கட்டப்பட்ட கே.பி.பார்க் குடியிருப்பில் ஐஐடி நிபுணர்கள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். தொட்டாலே உதிரும் வகையில் கட்டப்பட்டிருந்த குடியிருப்பில் சீரமைப்பு பணிகள் நடந்த நிலையில், தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அமைச்சர் தா.மோ.அன்பரசன் உத்தரவின் பேரில் ஐஐடி நிபுணர்கள் ஆய்வு பணியை மேற்கொண்டு வருகின்றனர். விரலால் தொட்டாலே சிமெண்ட் பூச்சு உதிரும் காட்சி தமிழக மக்களை அதிர்ச்சியடைய செய்திருந்தது.

இதனிடையே, கட்டுமான குறைபாடு குறித்த தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேறியது. கவனக்குறைவாக இருந்த குற்றசாட்டில் குடுசை மாற்று வாரிய பொறியாளர்கள் இருவர் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், தவறு நடந்தது உறுதியானால் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்திருந்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்