விழுப்புரம் கள்ளச்சாராய உயிரிழப்புகள்.! 2 காவல்துறை அதிகாரிகள் அதிரடி சஸ்பெண்ட்.! 

விழுப்புரம் கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக 2 காவல்துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து ஐஜி கண்ணன்உத்தரவிட்டுள்ளார் .  .

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஓர் மீனவ கிராமத்தில் கள்ளச்சாராயம் அருந்தி சுரேஷ், சங்கர், தரணிவேல் என 3 பேர் மரணம் அடைந்துள்ளனர். மேலும் 13 பேர் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அமரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையினர் மேலும், விசாரணையை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றனர். =இந்நிலையில்,  இந்த கள்ளச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக, காவல் ஆய்வாளர் அருள் வடிவழகன், கோட்டக்குப்பம் மதுவிலக்கு தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் மரிய சோபி மஞ்சுளா ஆகியோரை சஸ்பெண்ட் செய்து வடக்கு மண்டல ஐஜி கண்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார் .

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.