தமிழகத்தில் ரயில் டிக்கெட் புக் செய்தால் மெசேஜ் இந்தியிலா..!

தமிழகத்தில் இருந்து ரயில் டிக்கெட் புக் செய்தால் மெசேஜ் இந்தியில் வருவதாக புகார் எழுந்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து ரயில் சேவை நிறுத்தப்பட்டது. தற்போது, தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு வருவதால், ரயில் சேவை குறைந்த அளவில் தொடங்கப்பட்டுள்ளது. வழிகாட்டு நடைமுறைகளைபப் பின்பற்றி  சிறப்பு ரயில்கள் இயக்கி வருகிறது.

இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட்டு ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் மூலம் முன்பதிவு செய்யப்படுகிறது. அப்படி முன்பதிவு செய்யப்படும் டிக்கெட் உறுதிப்படுத்தப்பட்ட குறுஞ்செய்தி வருவது வழக்கம்.

இந்நிலையில், தமிழகத்தில் தற்போது முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டை உறுதிப்படுத்தப்பட்ட வரும் குறுஞ்செய்தி இந்தியில் வருவதாக புகார் எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து, ஆங்கிலத்தில் அனுப்பப்பட்டு வந்த குறுஞ்செய்தி இந்தியில் வருவதால் பல்வேறு ரயில் பயணிகள் மற்றும் நலசங்கம் சார்பில் மத்திய ரயில்வே அமைச்சகத்திடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan