சப்பாத்தி மீதம் ஆயிருச்சா.. அப்போ சில்லி சப்பாத்தி செய்யுங்க சூப்பரா இருக்கும்..!

Chilli chappathi-சப்பாத்தி மீதம் ஆகிவிட்டால் அதை வீணாக்காமல் சில்லி சப்பாத்தி செய்வது எப்படி என இப்பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

  • சப்பாத்தி =5
  • பெரிய வெங்காயம் =2
  • தக்காளி =3
  • பச்சை மிளகாய் =3
  • இஞ்சி பூண்டு விழுது =1 ஸ்பூன்
  • காஸ்மீர் மிளகாய் தூள் =2
  • மிளகாய் தூள் =2 ஸ்பூன்
  • கரம் மசாலா =1 ஸ்பூன்
  • மல்லி தூள் =2 ஸ்பூன்
  • கொத்தமல்லி இல்லை =சிறிதளவு
  • எண்ணெய் =6 ஸ்பூன்

செய்முறை:

முதலில் சப்பாத்தியை ஒன்றாக எடுத்து வைத்து அதை உங்களுக்கு பிடித்த வடிவத்தில் நறுக்கி எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மூன்று ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் இரண்டு ஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள் சேர்க்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளவும்.

இப்போது நறுக்கி வைத்துள்ள சப்பாத்தி துண்டுகளை அதிலே சேர்த்து மொறுமொறுவென்று பொரித்தெடுக்கவும். இவ்வாறு பொரித்து  எடுத்தால் சில்லி சப்பாத்தி சுவையாக இருக்கும்.

மற்றொரு பாத்திரத்தில் மூன்று ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும், பிறகு தக்காளி சேர்த்து நன்கு வதக்கி அதிலே இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும்.

இப்போது அதிலே கரம் மசாலா மற்றும் மல்லித்தூளை சேர்த்து  கிளறி தேவைப்பட்டால் தக்காளி சாஸ் சேர்த்தும் கிளறினால் சுவை நன்றாக இருக்கும். அதன் பிறகு நாம் வறுத்து வைத்துள்ள சப்பாத்தி துண்டுகளை சேர்த்து நன்கு கலந்து விடவும். ஐந்து நிமிடம் வரை திருப்பி திருப்பி   கலந்து விட்டு இறக்கினால் சுவையான சில்லி சப்பாத்தி ரெடி.

நீங்கள் சப்பாத்தி செய்யும் போது இதுபோல் வித்தியாசமான முறையில்செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

author avatar
K Palaniammal
நான் பழனியம்மாள், இளங்கலை மனையியல் பட்டதாரியான நான் கடந்த ஆறு மாதங்களாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். லைஃப் ஸ்டைல், ஆன்மீகம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.