யாராவது ஒருவர் தூக்கிலிடப்படுகிறார் என்றால் அதைவிட அவசர வழக்கு வேறு ஏதும் இல்லை – எஸ்.ஏ.பா‌ப்டே.!

  • நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் வருகின்ற 22-ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என டெல்லி உயர்நீதிமன்றம்  நீதிமன்றம் அறிவித்து உள்ளது.
  • கருணை மனுவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்து விட்டார். இதற்கு எதிராக டெல்லி உச்சநீதிமன்றத்தில் முகேஷ் குமார் தரப்பில் மனு தாக்கல் செய்தார்.

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயாவை ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் 6 பேர் கொண்ட கும்பல் வன்கொடுமை செய்தனர்.  6 பேரில் ஒருவர் சிறுவர் என்பதால் அவரை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார். பின்பு அந்த சிறுவன் 3 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டான்.

அந்த 5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங்  திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.இதனையடுத்து குற்றவாளிகள் 4 பேருக்கும் வருகின்ற 22-ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என டெல்லி உயர்நீதிமன்றம்  நீதிமன்றம் அறிவித்து உள்ளது.

இந்நிலையில் நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனையை விதிக்கப்பட்டு உள்ள குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சிங்கின் கருணை மனுவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்து விட்டார்.இதற்கு எதிராக டெல்லி உச்சநீதிமன்றத்தில் முகேஷ் குமார் தரப்பில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்கும் படி முகேஷ் குமார் வழக்கறிஞர் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பா‌ப்டே விடும் இன்று  முறையிட்டார். அதற்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பா‌ப்டே வழக்குகளை பட்டியலிடும் அதிகாரியை அணுகுமாறு கூறினார்.

மேலும் யாராவது ஒருவர் தூக்கிலிடப்படுகிறார் என்றால் அதைவிட அவசர வழக்கு வேறு ஏதும் இருக்கமுடியாது என கூறினார். இதை பார்க்கும்போது முகேஷ் சிங்கின் மனு விரைவில் விசாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
murugan