எனது முயற்சி வெற்றியடைந்தால், யாருக்கும் சம்பளம் கிடையாது – அதிர்ச்சி கொடுத்த எலான் மஸ்க்

எனது முயற்சி வெற்றியடைந்தால் ட்விட்டர் நிர்வாகக் குழுவிற்கு சம்பளம் 0 டாலராக இருக்கும் என எலான் மஸ்க் தகவல்.

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவருமான எலோன் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தின் 9.2% பங்குகளை சமீபத்தில் வாங்கியிருந்தார். இதனால், தற்போது 7 கோடியே 34 லட்சம் டிவிட்டர் நிறுவன பங்குகள் அவரிடம் உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ட்விட்டரில் மிகப்பெரிய பங்குதாரராக எலான் மஸ்க் உள்ளார். ஆனால், ட்விட்டர் நிர்வாகக் குழுவில் இணைய மஸ்க் மறுத்துவிட்டார்.

இதனைத்தொடர்ந்து, ட்விட்டரை கைப்பற்றுவதற்கு எலான் மஸ்க் முயற்சி எடுத்து வரும் நிலையில், ட்விட்டரின் தலைவர் பிரட் டெய்லருக்கு எழுதிய கடிதத்தில், ட்விட்டரை 43 பில்லியன் டாலருக்கு நானே வாங்கிக்கொள்கிறேன் என்றும் இதுதான் தனது சிறந்த மற்றும் இறுதி சலுகை எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க், ட்விட்டரை கையகப்படுத்தும் முயற்சி வெற்றியடைந்தால், ட்விட்டர் நிர்வாகக் குழுவின் உறுப்பினர்களுக்கு சம்பளம் கிடையாது என தெரிவித்துள்ளார். இந்த பூஜ்ஜிய சம்பளத்தால் ஒவ்வொரு ஆண்டும் அங்கேயே 3 மில்லியன் டாலர் சேமிக்க முடியும் என்று தெரிவித்திருப்பது, ட்விட்டர் நிர்வாக உறுப்பினர்களை அதிர்ச்சியும், எரிச்சல் ஊட்டும் விதமாகவும் உள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்