இலங்கைக்கு எதிரான போட்டியில் சாதனை படைத்தபோது அழுத ரோகித் சர்மா மனைவி.. இதுதான் காரணம்

இலங்கைக்கு எதிரான போட்டியில் சாதனை படைத்த ரோஹித் ஷர்மாவின் கையில் சிறிதாக

By bala | Published: Jun 06, 2020 06:58 PM

இலங்கைக்கு எதிரான போட்டியில் சாதனை படைத்த ரோஹித் ஷர்மாவின் கையில் சிறிதாக காயம் ஏற்பட்டது. அதற்க்கு அவரின் மனைவி அழுததை ரோஹித் ஷர்மா வெளிப்படுத்தினார்.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா. இவர் மட்டுமே 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 200 ரன்கள் மேல் குவித்து சாதனை படைத்தார். அந்த போட்டியின்போது, ரோஹித் சர்மா மனைவி மொஹாலியில் இலங்கைக்கு எதிராக சாதனை படைத்தபோது அழுதார்.

அது குறித்து ரோஹித் சர்மா கூறுகையில், "நான் அந்த போட்டியில் விளையாடும் பொது எனது மனைவி கவலைப்பட்டு பயந்தார். அந்த நாள் எங்களுக்கு சிறப்பு வாய்ந்தது ஏனெனில், அந்த நாள் எண்களின் கல்யாண நாளும் கூட. அந்த தினத்தில் என்னுடைய மனைவிக்கு நான் கொடுத்த சிறந்த பரிசு, நான் அடித்த இரட்டைச் சதம்"

"நான் மைதானத்திலிருந்து வெளிவரும் போது என்னுடைய மனைவியிடம், எதற்காக அழுதாய் என்று கேட்டேன்" அதற்க்கு ரித்திகா கூறியது, "நான் 196வது ரன்னை எடுக்கும் போது இந்த பகுதியிலிருந்து அந்த பகுதிக்கு டைவ் செய்தேன். அப்போது என் கைகளில் பெரிய காயமடைந்து விட்டதாக நினைத்து அழுததாக என்னுடைய மனைவி ரித்திகா கூறினார்". மேலும் தெரிவித்த அவர், அந்த போட்டியில் நான் மெதுவாகதான் ஆடினேன், இரட்டைச் சதம் அடிப்பேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை என கூறினார்.

Step2: Place in ads Display sections

unicc