சாலையை திருத்துனா தான் மாலையை மாத்துவேன் – கர்நாடக முதல்வருக்கு ஆசிரியை கடிதம்!

தங்கள் பகுதியில் உள்ள சாலைகள் மோசமாக இருப்பதினால் பலருக்கு திருமணம் நடக்காமல் உள்ளதாக கர்நாடக மாநில முதல்வருக்கு இளம்பண் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார். 

கர்நாடக மாநிலத்தில் உள்ள தாவன்கரே எனும் மாவட்டத்தில் உள்ள ஹெச்.ராம்புரா எனும் கிராமத்தில் உள்ள பகுதியில் சாலைகள் அனைத்தும் மிக மோசமான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த கிராமத்தை சேர்ந்த 26 வயதுடைய ஆசிரியை ஒருவர் அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்களுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் எங்கள் பகுதியில் சாலைகள் மோசமாக இருப்பதால் தாங்கள் இன்னும் பின்தங்கிய நிலையில் இருப்பதாகவும், எங்கள் ஊரில் பலருக்கு திருமணம் ஆகவில்லை. அதற்கு காரணமே இந்த மோசமான சாலைகள் தான் எனவும் கூறியுள்ளார். ஏனென்றால், இந்த ஊரில் திருமணம் செய்தால் குழந்தைகள், வெளியூர் சென்று கல்வி பயில சரியான சாலைகள் இல்லை என்று வெளியூர்க்காரர்கள் நினைப்பதாகவும், சாலையை சீரமைக்கும் வரை தானும் திருமணம் செய்து கொள்ள போவதில்லை எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இது குறித்து அந்தப் பகுதியின் பஞ்சாயத்து மேம்பாட்டு அதிகாரி கூறுகையில், நாங்கள் சாலையை மேம்படுத்துவதற்காக 2 லட்சம் செலவு செய்துள்ளோம். ஆனால் அது போதுமானதாக இல்லாததால், இன்னும் எங்களுக்கு 50 லட்சத்திலிருந்து, ஒரு கோடி ரூபாய் வரை தேவைப்படுகிறது. அதற்காக அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம் என தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

author avatar
Rebekal