வெளிநாட்டு வீரர்கள் பாதுகாப்பாக சென்ற பிறகு தான் நான் வீட்டுக்கு செல்வேன் – தோனி..!!

வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் முதலில் தங்கள் நாடுகளுக்குத் திரும்பவேண்டும் அதற்கு பிறகு இந்திய வீரர்கள் தங்கள் வீடுகளுக்குப் செல்லலாம் என்று சென்னை அணி கேப்டன் தோனி கூறியுள்ளார். 

14 வது சீசன் ஐபிஎல் தொடர் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இதுவரை 29 போட்டிகள் முடிந்துள்ளது. கொல்கத்தா அணி வீரர்கள் இருவருக்கும், சென்னையில் சார்ந்த இருவருக்கும் ஹைதராபாத் அணியை சேர்ந்த வீரர் விரித்திமான் சாஹா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து வீரர்கள் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் தொடரை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா நேற்று முன் தெரிவித்தார்.

இந்த நிலையில் இதனை தொடர்ந்து வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் தங்களது நாடுகளுக்கு தனி விமானம் மூலம்  திரும்பி செல்கின்றார்கள். அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தங்கள் அணியில் உள்ள வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் என அனைவரும் வீடு திரும்ப தனி விமானம் ஏற்பாடு செய்திருக்கிறது.

இதனை தொடர்ந்து நேற்று வீடியோ கால் மூலம் சென்னை அணி கேப்டன் தோனி பேசியது ”  வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் முதலில் தங்கள் நாடுகளுக்குத் திரும்பவேண்டும்,  அதற்கு பிறகு இந்திய வீரர்கள் தங்கள் வீடுகளுக்குப் செல்லலாம்  நம் அணியின் வீரர்கள் எல்லோரும் தங்கள் வீடுகளுக்குச் சென்றபிறகுதான் நான் சொந்த ஊருக்கு செல்வேன் அதுவரை நான் டெல்லியில்தான் இருப்பேன்’ என்று கூறியுள்ளார்.

மேலும் ஏற்கனவே சென்னை வீரர்கள் சாம் கரண் மற்றும் மொயின் அலி, நேற்று காலை லண்டன் சென்றுவிட்டார்கள். இவர்களை தொடர்ந்து டுப்ளெஸ்ஸி,  இம்ரான்தாஹிர், பந்துவீச்சி பயிற்சியாள் எரிக் சிம்மன்ஸ் அனைவரும் தென்னாப்பிரிக்காவுக்கு சென்றுவிட்டனர். பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃப்ளெம்மிங் நியூஸிலாந்து சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.