வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறினேன் – விமான விபத்தில் உயிரிழந்த பணிப்பெண்ணின் தந்தை உருக்கம்..!

நேபாள விமான விபத்தில் உயிரிழந்த பணிப்பெண்ணின் தந்தை ஓஷினை விபத்து நடந்த அன்று வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறியதாக தெரிவித்துள்ளார். 

நேபாள தலைநகர் காத்மாண்டில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை 10:33 மணிக்கு ஏ டி ஆர் 72 விமானம் பொக்காரா நோக்கி புறப்பட்டது. இந்த விமானத்தில் 68 பயணிகளும், நான்கு விமான பணியாளர்களும் இருந்தனர். இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த அனைவருமே உயிரிழந்தனர்.

ஓய்வுபெற்ற இந்திய ராணுவ அதிகாரியான மோகன், அலே மாகர்  மகள் ஓஷின் அலே மாகர். ஓஷின் எட்டி ஏர்லைன்ஸில் இரண்டு வருடங்களாக பணிபுரிந்து வந்தார். ஓஷினுக்கு இரண்டு சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர் உள்ளனர்.

அவர் கைந்தகோட்டில் உள்ள ஆக்ஸ்போர்டு கல்லூரியிலும்,  படித்தார் மற்றும் காத்மாண்டுவில் உள்ள சஹாரா ஏர் ஹோஸ்டஸ் அகாடமியில் ஏர் ஹோஸ்டஸ் பட்டம் பெற்றார். ஓஷின் போக்ராவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார், அவரது கணவர் தற்போது இங்கிலாந்தில் உள்ளார்.

இந்த நிலையில், விமான பணிப்பெண் ஓஷினின் தந்தை கூறுகையில், விபத்து நடந்த அன்றைய தினம் ஓஷினை  வேலைக்கு போக வேண்டாம் என கூறினோம். ஆனால் அவர் வேலைக்கு சென்றதாக உருக்கமாக கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment